கோடீஸ்வர யோகம் பெற! இந்த 5 ரூபாயை இப்படி வையுங்கள்!

Photo of author

By Kowsalya

அனைவரும் கஷ்டபட்டு தான் சம்பாதிக்கின்றனர். ஆனால் அது நிலைப்பதில்லை என புலம்புவார்கள் அதிகம். பணத்தை நிலையாக வசப்டுத்துவது என்பது நாம் செய்யும் பூஜைகள் பரிகாரங்கள் மூலம் நிலைக்க செய்யலாம்.

ஒருவருடைய ஜாதகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சூரியன் சந்திரன் இருப்பார்கள். சூரிய சந்திரனை வைத்தே அனைத்து விசயமும் நடக்கிறது.

ராஜயோகம் என்பது சந்திர பகவானால் ஏற்படுவது. சந்திர பகவான் உடைய ஆசிர்வாதம் கிடைக்க, பௌர்ணமி அன்று இந்த பரிகாரம் செய்ய வேண்டும். அதை எப்படி செய்வது? என்பதை பற்றிதான் இந்த பதிவு!

சந்திர பகவானின் அருள் பெற பௌர்ணமி அன்று இந்த வழிபாடு செய்ய வேண்டும். பணம் பல வழிகளில் தானாகவே உங்களை வந்து வரும்.

இந்த பரிகாரத்தை செய்ய பவுர்ணமி அன்று மாலை வேளையில் சூரிய மறைந்த பிறகு சந்திர பிம்பம் முழுமையாக தெரியும் நேரத்தில் செய்ய வேண்டும்.

1. 5 ரூபாய் நாணயத்தை எடுத்து கொள்ளுங்கள்.

2. வெள்ளை பேப்பரை எடுத்து நான்கு புறமும் மஞ்சள் வைத்து கொள்ளுங்கள்.

3. பின்னர் சந்திர காயத்ரி மந்திரத்தை சொல்லி அதில் எழுதவும்.

4. நடுவில் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து, அதற்கு இடையே மஞ்சள், குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

5. தாம்பூலதை எடுத்து அதில் அந்த பேப்பரை வைத்து அதன் மேல் 5 ரூபாய் நாணயத்தை காணிக்கையாக சமர்ப்பியுங்கள்.

6. தாம்பூலம் சுற்றிலும் பூவை தூவுங்கள்.

7. கஷ்டங்கள் தீர சந்திர பகவானிடம் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள்.

8. . இதை பூஜையை பூஜை அறையில் செய்வது மிகவும் நல்லது.

9. பணம் நிலைக்க, மென்மேலும் அதிகரிக்க வேண்டும் என நினைத்து சந்திர பகவானை மனமுருக வேண்டுங்கள்.

10. பின்னர் தம்பூலதை அப்படியே விட்டு விட்டு மறுநாள் காலையில் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு வெள்ளை துணியில் முடிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

11. இதனை உங்களுடைய பர்ஸ் அல்லது பணம் வைக்கும் இடம் பீரோவில் வைக்கவும் .

12. சந்திர காயத்ரி மந்திரம் எழுதிய பேப்பரை மடித்து பூஜையறையில் உள்ள கடவுள் படத்திற்கு பின்னால் வைத்துக் கொள்ளுங்கள்.

கற்கண்டு அல்லது வெள்ளை பட்சணங்கள் படைத்து வழிபடுவது நல்லது.

இந்த பூஜையை தொடர்ந்து 9 பௌர்ணமி செய்து வர பணதடை நீங்கும். கையில் பணம் எப்பொழுதும் இருக்கும்.