13 நோய்களுக்கு மருந்தாகும் வேப்ப எண்ணெய்!

0
115

வேப்ப இலையின் மருத்துவம் நாம் அறிந்ததே. வேப்ப எண்ணெய் மகத்துவம் பற்றி பார்ப்போம் வாருங்கள்!

1. தோல் சுருக்கங்கள் மறைந்து இளமை தோற்றத்தை பெற வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர சரியாகும்.

2. தோலில் உள்ள சொறி சிரங்கு வேப்ப எண்ணெய் பூசி வர குணமாகும். மேலும் தோல் மிருதுவாக மாறும்.

3. ஒரு சிலருக்கு குளிர்காலங்களில் தோல் வெடிப்பு ஏற்படும். இந்த வேப்ப எண்ணெய் பூசி வர வெடிப்பு மறையும்.

4. காயம் ஏற்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெய் தடவினால் காயம் சீக்கிரம் குணமாகும்.

5. வேப்ப எண்ணெயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் கிருமி நாசினியாக பயன்படுகிறது.

6. எப்பேர்பட்ட கரும்புள்ளிகள் முகத்தில் இருந்தாலும் வேப்ப எண்ணெய் பூசி வர விரைவில் மறையும்.

7. கருவளையம், படர்தாமரை குணமாக வேப்ப எண்ணெய் போதும்.

8. பொடுகு தொல்லை நீங்க வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து தடவி வர பொடுகு நீங்கும்.

9. தினமும் வேப்ப எண்ணெய் தலைக்கு தடவி வர முடி நன்கு வளரும். தலையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

10. வேப்ப எண்ணெய் அஜீரன கோளாறுகளை நீக்கும். வாய் து்நாற்றத்தையும் போக்குகிறது. வயிற்று புண்ணை ஆற்றும்.

11. புற்று நோய் உள்ளவர்கள் வேப்ப எண்ணெயை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

12. வேப்ப எண்ணெயில் விளக்கை ஏற்றினால் கொசுக்கள் வீட்டை விட்டு வெளியேறி விடும். உடலில் தடவி கொண்டாலும் கொசு கடிக்காது.

13. நீர் தொட்டியில் கொசுக்கள் உருவாவதை தடுக்க வேப்ப எண்ணெய் சில சொட்டு விட கொசு உருவாகாது.

author avatar
Kowsalya