உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!

Photo of author

By Divya

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!

ஒரு சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் 1 ரூபாய் நாணயம் 21 அல்லது 51 அல்லது 108 வைத்து அதன் மீது பூ வைத்து ஒரு சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் வைக்கவும்.

ஒரு சிறிய வலம்புரி சங்கு வாங்கி அதில் சிறிது அரிசி போட்டு நிரப்பி அதற்குள் 5 ரூபாய் நாணயம் ஒன்று வைத்து அதற்கு பூ வைக்கவும்.

முடிந்தவர்கள் 100 ரூபாய்க்கு ஒரு சிறிய சந்தனக் கட்டை வாங்கி தட்டில் வைத்து பூ வைக்கலாம்.

11 கோமதி சக்கரம் வாங்கி ஒரு தட்டில் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூ வைக்கவும்.

இந்த நான்கில் எதாவது 2 விஷயங்கள் செய்து வந்தால் கூட பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.

தினமும் தண்ணீர் வைத்து அதில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் போடவும்.

செவ்வாய், வெள்ளி அன்று வெண் குங்குலியம், வெண் கடுகு, மருதாணி விதை, பட்டை, இலவங்கம் சேர்த்து சாம்பிராணி புகை காட்டவும்.

செவ்வாய், வெள்ளி அன்று குலதெய்வத்திற்கு தனியாக 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் எடுத்து காணிக்கை வைத்து சேர்த்துக் கொண்டு வந்து அங்கு போகும் போது காணிக்கை செலுத்தவும்.

இறந்தவர்கள் படம் பூஜை அறையில் வைக்காமல் பார்த்துக் கொள்ளவும்.