70000 ரசிகர்களுக்கு விராட் கோஹ்லி மாஸ்க் வழங்க திட்டம்! அதற்கு காரணம் இதுதான்!!
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா விளையாடவுள்ள உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் 70000 ரசிகர்களுக்கு விராட் கோஹ்லி அவர்களின் மாஸ்க் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களின் சிறப்பான ஆட்டம் ஒரு பக்கம் காரணமாக இருக்க மற்றொரு பக்கம் விராட் கோஹ்லி அவர்களின் சிறப்பான ஆட்டம் முக்கிய காரணமாக உள்ளது.
பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிவரும் விராட் கோஹ்லி அவர்கள் பீல்டிங்கிலும் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றார். இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் விராட் கோஹ்லி அவர்கள் 354 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் ஒரு சதம் மற்றும் 3 அரை சதங்கள் அடித்துள்ளார்.
இதையடுத்து இந்திய அணி தனது 7வது லீக் சுற்றில் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாடவுள்ளது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் அன்றைய தினம் அதாவது நவம்பர் 5ம் தேதி விராட் கோஹ்லி அவர்கள் 35வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதையடுத்து விராட் கோஹ்லி அவர்களின். பிறந்த நாளை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என்று மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து நவம்பர் 5ம் தேதி நடைபெறும் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியை காண வரும் ரசிகர்களில் 70000 பேருக்கு விராட் கோஹ்லி அவர்களின் முகத்துடன் கூடிய மாஸ்க் அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் லேசர் ஷோ, வான வேடிக்கை ஆகியவையும் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.