ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து நியாவிலை கடைகளிலும் குறைந்த விலையில் அரிசி ,பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் அரிசியை ஆந்திர கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்று வருகின்றனர். வெளிமாநிலத்திற்கு சென்று அரிசியானது பாலிஸ் செய்யப்பட்டு மீண்டும் தமிழ்நாடுக்கு அனுப்பப்படுகிறது.
கர்நாடகா பொன்னி,ஆந்திரா பொன்னி போன்ற பல பெயர்களை வைத்து கிலோ 50 ரூபாய் விற்கப்படுகிறது. இந்த அரிசி கடத்தலைத் தடுப்பதற்காக அரசானது பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த அரிசி கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.
இதனை தடுக்க நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு சிரமமாக இருக்கும் விதிமுறைகள் மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரிசி கடத்தலை தடுப்பதற்காக மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் உணவு பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.