கஜகஸ்தான் நாட்டில் விமான விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் அதில் 38 பேர் பலியான நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த 29 பேர் எந்தவிதமான காயங்களும் இல்லாமல் உயிர் தப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
டிசம்பர் 25ஆம் தேதி ஆன நேற்று, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று 5 விமான பணியாளர்கள் மற்றும் 62 பயணிகளுடன் வானத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது விமானத்திற்கு எதிரில் திடீரென பறவை கூட்டம் வந்த மோதியதால் நிலை தடுமாறிய விமானி விமானத்தின் திசையை மாற்ற முடியாமல் அதனை உடனடியாக தரையிறக்கம் செய்ய முயற்சித்துள்ளார்.
அப்பொழுது கட்டுப்பாடு இன்றி பறந்த விமானம் விமான நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு முன்னதாகவே உள்ள கடற்கரை நிலப் பகுதியில் வலது பக்கமாக சாய்ந்த நிலையில் தரையில் மோதி இறங்கி இருக்கிறது. இந்த 62 பயணிகளில் ஒருவன் 11 வயது தக்க சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலத்தில் மோதிய விமானம் ஆனது தீப்பிடித்து எரிய தொடங்கிய நிலையில் அவசரகால கதவு வழியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். உடனடியாக மீட்பு குழுவினரும் தங்களுடைய பணிகளை துவங்க 29 பெயரை அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இல்லாமல் காப்பாற்றியுள்ளனர். ஆனால் 38 பேர் பலியாகி இருப்பது மிகப்பெரிய சோகத்தை உருவாக்கியிருக்கிறது.
சிறு காயங்களுடன் தப்பியவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.