நொறுக்கு தீனி என்று சொல்லப்படும் சிறு திண்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்க தடை மற்றும் பிளாஸ்டிக் தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் எண்ணெய் பொருட்களை பிளாஸ்டிக் பையில் அடைத்து விற்கும் பொதுவான வியாபார விற்பனை நடந்து வருகிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடையானது 2018 ஆம் ஆண்டு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த உத்தரவின் படி பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படும் வாட்டர் பாக்கெட், டீ கப், பிளாஸ்டிக் பேக் உட்பட 14 பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பின்னர் நடந்த விசாரணையில் தமிழக அரசு பிளாஸ்டிக் குறித்து வெளியிட்ட தடை உத்தரவு செல்லும் என நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து பிளாஸ்டிக் தடை சம்பந்தமான அரசாணையில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதில் நொறுக்கு தீனிகளை பிளாஸ்டிக் அடைத்து விற்கவும். பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.