குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் மேகி நூடுல்ஸ் உடலுக்கு கேடு என அதை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனமே ஏற்றுக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
பல்வேறு நாடுகளில் உலகங்களில் தனது தயாரிப்பு மையங்களை அமைத்து நெஸ்லே நிறுவனம் உணவுப் பொருட்களை தயாரித்து வருகிறது. அடிக்கடி தரம் பற்றிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டாலும், அந்நிறுவனம் இரண்டே நிமிடங்களில் தயார் ஆகி உலகம் முழுவதும் பரப்பி சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் அதை விரும்பி உண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
இதற்கிடையே அந்த நிறுவனத்தின் அதிகாரிகளே அவர்களின் உணவுப் பொருள்களின் தரத்தை அறிக்கையாக வெளியிட்டு உள்ளார்கள். அதை சமர்ப்பித்தும் உள்ளார்கள். அதில் திடுக்கிடும் தகவல்களும் உள்ளது. அவர்கள் தயாரிக்கும் 60 சதவீத உணவுப் பொருட்கள் ஆரோக்கியமற்றது அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் தயாரிக்கும் ஐஸ்கிரீம், மேகி நூடுல்ஸ் உட்பட பல உணவுப் பொருட்கள் ஆரோக்கியமற்றதாம். இந்த அறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இது ஆரோக்கியம் சம்பந்தமான விஷயம் என்பதால் அதை சுவையுடன் தயார் செய்வதற்கான மாற்றங்கள் கொண்டுவரப்படும் என நெஸ்லே நிறுவனம் கூறியுள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு இந்த உணவு தருவதை தவிர்த்தால் குழந்தைகள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.