ராஜஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு பரிதாப நிலை – தொடர்ந்து 31 முறை கொரோனா உறுதி

Photo of author

By Parthipan K

இந்த கொரோனா நோய்த்தொற்று பரவல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதித்துள்ளது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் என்கின்ற ஊரைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது இந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து இதுவரை 31 முறை பரிசோதித்தும் கொரோனா தொற்று இருப்பதாகவே ரிசல்ட் வந்துள்ளது.

இதுவரை அந்தப் பெண்ணுக்கு 14 முறை விரைவு சோதனையும் மற்றும் 17 முறை ஆன்டிஜென் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. ஆகமொத்தம் 31 முறை சோதனை நடத்தியும் அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவே தெரியவந்துள்ளது.

அந்தப் பெண்ணுக்கு மனநலமும், நோய் எதிர்ப்பாற்றலும் குறைவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பெண்ணின் பரிதாப நிலையைக் கண்டு மருத்துவர்களே வருத்தம் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தப் பெண்ணை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைத்து மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதித்தும், கண்காணித்தும் வருகின்றனர்.