இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!
நடப்பு கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இன்று பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு தொடங்குகின்றது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8,51,33 மாணவ மாணவிகளும் தனித்தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்தி 75 ஆயிரத்து 50 பேர் எழுதி இருக்கின்றனர்.
மேலும் சென்னை மாநகரில் மட்டும் 45 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்து 982 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைகளில் போதிய மின்சார வசதி, குடிநீர் வசதி, இருக்கை வசதி என அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளது. முன்னதாகவே தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த தேர்வை கண்காணிக்க பொறுப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்த பணிகளை உன்னிப்பாக கவனிக்கின்றன. தேர்வரை கண்காணிப்பாளராக 46 ஆயிரத்து 870 பேரும் மாணவர்கள் காப்பி அடிக்கின்றார்களா என்பதை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான படை உறுப்பினர்கள் 1235 பேரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி புகைப்படம், பதிவெண் , பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத் தாள்களுடன் முதன்மை வினைத்தாள்கள் மாணவ மாணவிகளுக்கு தேர்வறையில் வழங்கப்படும்.
அதனை தொடர்ந்து தேர்வு எழுத தொடங்கலாம் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வானது காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாள்களை படித்து பார்ப்பதற்கும் அடுத்த ஐந்து நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரி பார்ப்பதற்கும் பின்னர் தொடர்ந்து மூன்று மணி நேரம் தேர்வு எழுதுவதற்கும் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளி நாளை மறுநாள் ஆங்கில தேர்வு நடக்க உள்ளது. தொடர்ச்சியாக ஒவ்வொரு பாடப்பிரிவினருக்கும் தேர்வு நடத்தப்பட்டு அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் மூன்றாம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகளுடன் பிளஸ் டூ பொதுத்தேர்வு நிறைவு பெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் பத்தாம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.
இந்த பணியில் 48,00 முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.திருத்தும் பணி நிறைவு பெற்ற பிறகு மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு. முன்னதாகவே திட்டமிட்டபடி வரும் மே மாதம் ஐந்தாம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். மேலும் தேர்வெழுதும் மாணவர்கள் அச்சிடப்பட்ட புத்தகங்கள், கையேடுகள், கையெழுத்து பிரதிகள், துண்டு சீட்டுகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அந்த மாணவரின் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படும்.
மேலும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் தரப்படும் மேலும் ஆட்சபனைக்குரிய பொருட்களை வைத்திருப்பது பயன்படுத்தினால் அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதோடு அடுத்த ஓராண்டு தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும்.