பி.எம்.கிசான் திட்டம்!! விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய தகவல்!

0
251
PM Kisan Scheme!! Central government important information for farmers!
PM Kisan Scheme!! Central government important information for farmers!

பி.எம்.கிசான் திட்டம்!! விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய தகவல்!

பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளுக்கு 13-வது தவணைத் தொகை ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்ச வருமான ஆதரவு திட்டம் தான் பிரதம மந்திரியின் பி.எம்.கிசான் திட்டமாகும். ரூபாய் 6000 தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ், வழங்கப்பட்டு வருகிறது. சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை ஒவ்வொரு பயிர்சுழற்சியின் முடிவிலும் நிரப்புவதே இதன் தலையாய நோக்கமாகும்.

பி.எம்.கிசானின் கீழ் இந்த பண உதவி 3 சம தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.இதன்கீழ் கணவன், மனைவி,மற்றும் மைனர் குழந்தைகள் ஒரு குடும்பமாக கருதப்பாடுவார்கள். இதற்க்கு தகுதி வாய்ந்த விவசாயிகளை அடையாளம் காண்பது அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் செய்யப்படுகிறது. இதன்படி அனைத்து நில உரிமையாளர்களும் ஒரு பகுதியாக இல்லாமல் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு மட்டும் சேரும் வகையில் மத்திய அரசு காசோலைகள் மற்றும் அளவுகோல்களை அமைத்துள்ளது.

இந்நிலையில் இந்த திட்டத்தை பற்றிய முக்கிய செய்தி ஒன்றினை மத்தியஅரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் விளக்கம் ஒன்றினை அளித்தார். பி.எம்.திட்டத்தின் கீழ் 12-வது தவணையில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 8.42 கோடியை எட்டியுள்ளது.

இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில்  13-வது தவணை எப்போது வழங்கப்படும் என்று விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் ஜனவரி மாதத்தில் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. ஒவ்வொரு தவணையின் போதும் விவசாயிகளின் கணக்கில் ரூபாய் 2000 செலுத்தப்படும் நிலையில் சில வசதிப்படைத்தவர்களும் இதில் பயன் பெறுவதால் அவர்களை கண்டறிந்து நீக்கும் பணியும் அரசு எடுத்து வருகிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Previous articleஐயோ வலிக்கிது விடுங்க சார்.. ! கதற கதற 3 ஆம் வகுப்பு மாணவியை புதருக்குள் இழுத்து அத்துமீறிய எச்எம்!
Next article“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” அமைச்சராக முதல் கையெழுத்து! விளையாட்டு ஓய்வூதியதாரர்களுக்கு வெளியிட்ட இன்பச் செய்தி!!