“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” அமைச்சராக முதல் கையெழுத்து! விளையாட்டு ஓய்வூதியதாரர்களுக்கு வெளியிட்ட இன்பச் செய்தி!!

0
259
"Udhayanidhi Stalin" is my first signature as a minister! Good news for sports pensioners!!

“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” அமைச்சராக முதல் கையெழுத்து! விளையாட்டு ஓய்வூதியதாரர்களுக்கு வெளியிட்ட இன்பச் செய்தி!!

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்க்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தும் கோப்பில் தனது முதல் கையொப்பத்தை அதிரடியாக இட்டார்.

இன்று காலை தமிழ்நாடு அமைச்சரவையில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதிகளின்  எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு  அமைச்சராக ஆளுநர் முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து  இன்று காலை 9-30 மணி அளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹாலில் நடந்த பதவியேற்பு விழாவில்   இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு அமைச்சராக உதயநிதிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என். ரவி செய்து வைத்தார். அடுத்து  தொடங்கிய உதயநிதி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.

பதவியேற்றதும் உதயநிதி அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியதும் தலைமை செயலகம் புறப்பட்டார்.அங்கு வந்தடைந்த உதயநிதிக்கு மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு , சேகர்பாபு, எ.வ.வேலு ஆகியோர் உதயநிதியை வாழ்த்தி அவருக்குரிய இருக்கையில் அமர வைத்தனர். அலுவலக பொறுப்பை ஏற்றதும் விளையாட்டுத் துறை சம்பந்தமான முக்கிய கோப்புகளில் தனது முதல் கையொப்பத்தை இட்டார்.

அதன்படி அவரது முதல் கையெழுத்தே அதிரடியாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஒய்வூதியத்தை ரூ 3000 – லிருந்து ரூ 6000-ஆக உயர்த்துவதாகும். மேலும் கபடி போட்டி நடத்துவதர்க்கான முதல் அமைச்சர் கோப்பைக்கு  2022-2023 –ஆம் ஆண்டு முதல் ரூ 47  கோடியை ஒதுக்கீடு  செய்து கையெழுத்திட்டதோடு துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற நிவேதிதா நாயருக்கு ரூ4- இலட்சத்துக்கான  காசோலையையும் அமைச்சர் உதயநிதி வழங்கினார்.