குறைவான தடுப்பூசி! 3ம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம்!

0
70

இந்தியாவில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநில அரசுகளின் பல அதிரடி நடவடிக்கைகள் நோய்தொற்று பரவலை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது.

அந்த வீட்டில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது அதிலும் தமிழகம் இந்த தடுப்பூசி போடும் பணியில் தமிழக அரசு மிக வேகமாக செயல்பட்டு வருகிறது .

அதனடிப்படையில் நாட்டில் நோய் தொற்று பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் விதத்திலும், தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது நேற்று காலை ஏழு மணி நிலவரத்தின் அடிப்படையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 106.14 கோடியை தாண்டி இருக்கிறது. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.

ஜி 20 மற்றும் சிஒபி26 மாநாடுகளில் பங்கேற்று கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் இந்த சூழ்நிலையில், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பியவுடன் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி குறைந்த அளவு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு கூட்டத்தை நடத்த இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தடுப்பூசியின் முதல் தவணை 50 சதவீதத்திற்கும் கீழ் இரண்டாவது தவணை மிகவும் குறைவாக செலுத்தப்பட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது அதன்படி இந்த கூட்டத்தில் ஜார்கண்ட், மணிப்பூர் நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களின் மாவட்டங்களைச் சேர்ந்த 40 மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அண்டை மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள். காணொளி மூலமாக நவம்பர் மாதம் மூன்றாம் தேதி மதியம் 12 மணி அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. இதில் தடுப்பூசியை எவ்வாறு விரைவுபடுத்துவது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

10 கோடிக்கும் மேலான மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டுவியா தெரிவித்த ஒரு சில நாட்களுக்கு பின்னர் மாவட்ட ஆட்சியாளர்கள் உடன் நரேந்திர மோடி ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.