BREAKING: கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை- அரசு அறிவிப்பு.!!

0
67

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அதனைத் தொடர்ந்து, இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன் காரணமாக, மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல தயாராக உள்ளனர்.

காலை முதல் மாலை வரை வழக்கம்போல் முழு நேர வகுப்புகள் நடைபெறும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது.

தற்போது தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கனமழை காரணமாக இன்று கடலூர், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.