பிரதமர் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் மூவரும் அடுத்தடுத்து போட்ட ட்வீட்!

Photo of author

By Sakthi

திரைத்துறையில் மிகவும் உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே விருது பெற்றிருக்கின்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அவர் விடுத்திருக்கின்ற வாழ்த்துச் செய்தி ஒன்றில் திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் தலைமைகளுக்கும் கடுமையான உழைப்புக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்தான் இந்த விருது இதேபோல அவர் பல விருதுகளையும் வாங்கவேண்டும் எல்லா வளமும் நலமும் பெற்று அவர் ஆண்டாண்டு காலம் நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

அதே போல எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கும் வாழ்த்தில் என்னுடைய நண்பரான ரஜினிக்கு இப்படி பட்ட உயரிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்திருக்கிறார்.தாமதமாக இந்த விருது கிடைத்திருந்தாலும் வரவேற்க்கத்தக்கது என்றார்.அதேபோல பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தலைமுறையினரையும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்தார் ரஜினிகாந்த் என்று தெரிவித்திருக்கிறார்0 தலைவாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.