நாடார்கள் வசமாகிறதா பாமக ?? உச்சக்கட்ட கோபத்தில் வன்னிய இளைஞர்கள்!!

Photo of author

By Parthipan K

நாடார்கள் வசமாகிறதா பாமக ?? உச்சக்கட்ட கோபத்தில் வன்னிய இளைஞர்கள்!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த வன்னியர் சமுதாய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சியால் உருவான வன்னியர் சங்கம் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் அனைத்து சமுதாய மக்களுக்குமான பாட்டாளி மக்கள்
கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து பெரும்பாலான முறை ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்களின் ஆதரவோடு திமுக மற்றும் அதிமுக போன்ற திராவிட கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அமைக்கவும் பாமக பெரும் பங்கு வகித்தது.

பாமக அனைத்து சமுதயத்திற்குமான கட்சி தான் என்பதை உறுதி செய்யும் நோக்கில் தங்களுக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வழங்கியது. மேலும் பாமகவை சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற அமைச்சர் பதவியில் இருந்த போது ரயில்வே துறையில் சேலம் ரயில்வே கோட்டம் போன்ற திட்டங்கள், போலியோ தடுப்பு, 108 இலவச ஆம்புலன்ஸ்,தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை இந்தியா முழுவதும் கொண்டு வந்து வெற்றியும் கண்டது.

விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பாமக அதற்காக தனி நிதி நிலை அறிக்கையும் வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது.மேலும் ஆளும் அரசிற்கு ஆலோசனை வழங்கும் விதமாக வருடம் தோறும் நிழல் நிதி நிலை அறிக்கையும் வெளியிட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் தினமும் அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் வெளியிட்டு தங்களை ஒரு சிறந்த எதிர்க்கட்சியாக நிரூபித்து வருகிறது பாமக.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனியாக போட்டியிட்டு தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை நிரூபித்து காட்டியது. பின்பு தமிழக முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றவர்களின் மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில் தங்களுக்கான அரசியல் வியூகத்தை மாற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்தித்தது. எதிர்க்கட்சிகள் இந்த கூட்டணியை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்திருந்தும் தமிழக அளவில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் குறிப்பிட்ட வெற்றியை பெற்று அதிமுக ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாமக பெரிதும் உதவியுள்ளது.

இந்நிலையில் பாமகவின் ஆணி வேராக செயல்பட்ட வன்னியர் சங்கத்தின் தலைவர் மாவீரன் என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்ட காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் மறைவையடுத்து கடந்த ஒரு வருடமாகவே எதிர்க்கட்சிகள் அவரின் மறைவை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். உயிருடன் இருந்த போது அவரை சாதி தலைவர் என்று விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் அவர் மறைந்த பிறகு அவருக்கு ஆதரவாக பேச தொடங்கியது தமிழக மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

காடுவெட்டி குரு வன்னியர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பின்பு தனது ஆவேசமான பேச்சு மூலம் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெரும் குற்றங்களுக்கும், சமூக சீர்குலைவுகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இத்தகைய செயல்பாடுகளால் அவர் மாற்று சமுதாய மக்களால் கூட பெரிதும் மதிக்கப்படும் மாமனிதர் ஆனார். அவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் பெருமளவு இளைஞர்கள் இடம்பெற்று இருப்பதற்கு இவரும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இருப்பினும் இவர் மறைந்த பிறகு மாற்று கட்சியில் உள்ள வன்னியர்களே இவரது படத்தை உபயோகிக்கும் போது சொந்த கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் பெரும்பாலான இடங்களில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும், பத்திரிக்கைகளிலும், பாதகைகளிலும் தொடர்ந்து இவரது பெயரோ படமோ இடம் பெறாமல் கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் புறக்கணித்து வருவதாக தொண்டர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் பாமகவின் மாநில பொருளாளராக விளங்கும் திலகபாமா அவர்கள் வெளியிட்டுள்ள நோட்டீஸில் மாவீரர் படம் இடம்பெறாமல் இருப்பதே இதை உறுதி செய்யும் வகையில் இருப்பதால் இந்த நிகழ்வு பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காடுவெட்டி குரு படத்தை புறக்கணித்த இவர்கள் மாற்றாக கட்சிக்கு சம்பந்தமே இல்லாத காமராஜர் மற்றும் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொரு மூத்த தலைவர் படமும் இடம் பெறுமாறு செய்துள்ளது அக்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கார் உள்ளிட்ட பாமக ஆதரிக்கும் அனைத்து தலைவர்களையும் பின்பற்ற தயாராக இருக்கும் பாமக தொண்டர்கள் மத்தியில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவரான திலகபாமா அவர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களை மட்டும் முன்னிறுத்தியது தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதே போன்று தொடர்ந்து காடுவெட்டி ஜெ குரு அவர்களை சொந்த கட்சியிலேயே வன்னியர் சங்கத் தலைவர் என்ற ஒரே காரணத்தினால் புறக்கணித்து வருவதால் பாமக இளைஞர்கள் மத்தியில் இன்று திலகபாமா பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.இதனையடுத்து இவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைக்கு பாமக இளைஞர்கள் தரப்பில் சமூகவலைதளங்களில் தங்களது தனிப்பட்ட எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாத திலகபாமா இன்று காலை வெளியிட்டுள்ள தனது முகநூல் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் .

கவிதையில் மாவீரரை மறைக்கப்பட்ட அதாவது ஒடிந்து விழுந்த சருகாகவும் அவருக்காக கேள்வி எழுப்பிய இளைஞர்களை புலம்பும் பாதையாகவும் இப்படியே புலம்பிக் கொண்டிருந்தால் இலக்கை அடைய முடியாது என்றும் வெளியிட்டுள்ளார் .

இதனால் கோபத்தில் இருந்த பாமக இளைஞர்கள் திலகபாமா வெளியிட்ட பதிவிற்கும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மதியம் இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் ஒரு கவிதையும் எழுதி விட்டு தான் எழுதிய கவிதை எல்லாம் இன்று எனக்கே துருப்பு சீட்டாய் அரசியலாக வந்து அமைந்துள்ளது என்றும், அடுத்து தனது மறு முகநூல் பதிவில் நான் எதற்கோ போட்ட பதிவு இன்று எனக்கே எதிர்ப்பாய் வந்து நின்றுள்ளது என தனது மறுப்பைத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மேல்மட்ட பொறுப்பாளர்களே இவ்வாறு நடந்து கொள்வது குறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் காடுவெட்டி குரு அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் கட்சி தலைமையிடம் தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். மேலும் அவரது புகைப்படம் பத்திரிக்கைகளிலும்,பாதாகைகளிலும் இது போல புறக்கணிக்கபட்டால் வன்னிய சமுதாய வாக்குகள் கிடைப்பது சந்தேகம் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதை கவனத்தில் கொண்டு இப்படிப்பட்ட ஒரு பொறுப்பாளர் போட்ட பதிவினால் கோபத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஏற்றார் போல நடவடிக்கை எடுக்கும்படி தொடர்ந்து இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தும் வருகின்றனர். எது எப்படியோ வன்னிய சமுதாயத்திலிருந்து உருவான பாமக அனைத்து சமுதயத்திற்கான கட்சி என வளர்ந்து தற்போது நாடார்கள் வசமாகி விடுமோ? என்ற பாமக தொண்டர்களின் அச்சமும் நியமானது தானே.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்