திராவிட கட்சிகளை மிஞ்சிய தேர்தல் அறிக்கை!! தில்லாக வாக்களித்த குடிமகன்கள்!!

0
231

திராவிட கட்சிகளை மிஞ்சிய தேர்தல் அறிக்கை!! தில்லாக வாக்களித்த குடிமகன்கள்!!

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். இந்த மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 

இந்நிலையில் திமுக வேட்பாளர் (கதிர் ஆனந்த்)- 4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் (ஏ.சி.சண்முகம்)- 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்(தீபலட்சுமி)- 26,995 வாக்குகளும் பெற்றனர்.

மேலும் இது குறித்து அறிக்கை ஒன்றை அக்கட்சி சார்பாக வெளியிட்டுள்ளார். அதில் 2530 வாக்குகள் அள்ளிதந்த வாக்காளர்களுக்கு நன்றி நன்றி. வேலூர் மக்களவை வாக்காளர்களுக்கும், டாஸ்மாக் மது பிரியர்களின் குடும்பங்களுக்கும் இதயபூர்வமான நன்றியை பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். என் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் பாசமிகு நண்பர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் இதயபூர்வமான நன்றி நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மாறி மாறி இலவசங்களை வழங்கி சலித்து போன திராவிட கட்சிகள் மத்தியில்
அவர்கள் வழி வந்தது போல தமிழகத்தை சீர் கெடுக்கும் இந்த அறிக்கை பிரச்சாரம் அதற்க்கும் வாக்களித்த குடி மகன்களை பார்க்கும் போது இந்நிலை மாற முதலில் மக்களே சிந்திக்க வேண்டும்.

ஆகையால் இந்த தேர்தல் ஒரு வெளிப்படையான பள்ளி மாணவர்களையும்
இளைஞர்களையும் பாதாலத்துக்கு இழுத்து செல்லும் திட்டமாக உள்ளது. இருப்பினும் மது குடிப்போர் சங்கத்துக்கு 2530 வாக்குகள் விழுந்ததை அரசியல் கட்சியினரும் மற்ற சுயேட்சை வேட்பாளர்களும் வியப்புடன் பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்


Previous articleநாடார்கள் வசமாகிறதா பாமக ?? உச்சக்கட்ட கோபத்தில் வன்னிய இளைஞர்கள்!!
Next articleசர்ச்சைக்குள்ளான தமிழிசை பேட்டி! காங்கிரஸ்க்கு ஆதரவு கோரும் தமிழிசை? பிஜேபி ஷாக்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here