கேரளா கர்நாடகா மாநிலங்களின் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கேரளா கர்நாடகா மக்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கிருஷ்ண சாகர் அணை நிரம்பி அணை திறந்து விடப்பட்டது. கேரளா அணை நிரம்பி கேரளாவும் அணையை திறந்து விட்டுள்ளது.
இதனால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காவிரியில் வினாடிக்கு 3 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம், 92 அடியை நெருங்கியது.இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை கடந்தது.
இதன் மூலம் 65-வது முறையாக 100 அடியை கடந்தது.
அணையின் கொள்ளளவு எட்டியதால் அணையை பாதுகாப்பு கருதி வேளாண்மை பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் இன்று நீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை கடந்தது.
அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதையடுத்து நீர்வள பொதுப்பணிதுறை அதிகாரிகள் காவிரி நீருக்கு பூஜை செய்தனர். தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி தஞ்சாவூர், நெற்களஞ்சியமாக விளங்க, மேட்டூர் அணை நீர் பாசனம், மிக முக்கிய ஆதாரமாக உள்ளது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை இன்று திறந்து விடப்பட்டது.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரித்து வரும் நாட்களில் 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும். இதனால் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலங்கள் நீர் பாசனம் பெரும் என கூறினார்.
ஆனால் பாமக தரப்பில் ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர். பாசனத்திற்காக செல்லும் நீர் தவிர மீதம் உள்ள நீரை பயன் படுத்த வேண்டும். இல்லையேல் வீணாக கடலில் கலக்கும். மழை பெய்யாத காலங்களில் இந்நீரை சேமிப்பது மூலம் விவசாயிகள் பயனடைவர். வீணாகும் நீரை ஏரி,குளம் போன்ற இடங்களில் நிரப்பி நீரை சேமிக்க வேண்டும்.
பாமகவின் இந்த கோரிக்கை ஏற்புடையதாக சமூக ஆர்வலர்களின் கருத்து ஆகும். ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் அவர்கள் தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து வீணாய் கடலில் கலக்கும் நீரை சேமிக்க தருமபுரி மக்களிடையே 10 லட்சம் கையெழுத்து என்ற செயலை செய்து மக்களிடம் 10 லட்சம் கையெழுத்து வாங்கி முதல்வரிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.