பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு அம்பலம் !!

Photo of author

By Parthipan K

கடந்த 2016 – 2019 ஆண்டில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சியில் 2016-2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட , பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக ஊர் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்காக தர்மபுரி மாவட்ட திட்ட அலுவலர் ஆர்த்தி என்பவர் முறைகேடு குறித்து விசாரிக்க  ஊராட்சி பகுதிக்கு  சென்று நேரடியாக ஆய்வினை  மேற்கொண்டார்.

அப்போது வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து முக்குளம் ஊராட்சி செயலாளர் சரவணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார்.மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.