விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

0
161

ஓ .என்.வி இலக்கிய விருது வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஓ .என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பித் தருகிறேன் என வைரமுத்து அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அறிக்கையில் அவர் கூறியதாவது, ஓ .என்.வி இலக்கிய விருது என்பது கேரளாவின் பெருமைமிக்க விருது. ஓ .என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு அளிப்பதாக ஓ .என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது. நானும் அதை நன்றியுணர்வோடு வரவேற்றேன். ஆனால் ஒரு சிலரின் காழ்புணர்ச்சியான செயல் குறுக்கிட்டதால், விருதை மறுபரிசீலனை செய்யப்படும், பின்னர் அறிவிக்கப்படும் என ஓ .என்.வி தெரிவித்தது.

 

இது என்னையும் கவிஞர் ஓ .என்.வி அவர்களையும் , அவரது குழுக்களையும் சிறுமை படுத்துவதாக எண்ணுகிறேன். அறிவு மிகுந்த நடுவர் குழுக்களும் இந்த இக்கட்டான சூழலுக்கு உள்ளாக்கப் படக்கூடாது என்று கருதுகிறேன். இவ்வளவு சர்ச்சையிலும் அந்த விருதை பெறுவதை தவிர்க்க விரும்புகிறேன். நான் உண்மையானவன் அதை யாரும் உரசிப் பார்க்கத் தேவை இல்லை. என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

 

மேலும் எனக்கு அளிப்பதாக இருந்த ஓ.என்.வி. இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி. கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை மூன்று லட்சம் ரூபாயை, கேரள முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும் என வேண்டுகிறேன்.

மேலும் இரு மாநிலங்களில் சகோதர உணர்வு நீடிக்கட்டும். எனக்கு வாழ்த்து கூறிய முதல்வர் மற்றும் உலகத் தமிழர் அனைவருக்கும் எனது நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

 

Previous articleTNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Next article1500 படங்களுக்கு மேல் நடித்து சாதனை செய்த நடிகை! மக்களின் மனதில் மறக்க முடியாதவர்!