உங்கள் இரத்தத்தில் படிந்துள்ள நச்சுக் கழிவுகள் மற்றும் கொழுப்புகளை வெளியில் தள்ள இங்கு தரப்பட்டுள்ள பானத்தை தயாரித்து குடிக்கலாம்.
**நஞ்சு முறிவு சூரணம் – மூன்று கிராம்
**தேன் – ஒரு தேக்கரண்டி
**தண்ணீர் – ஒரு கிளாஸ்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.அடுத்து இந்த நீரை கிளாஸிற்கு ஊற்றி இரண்டு அல்லது மூன்று கிராம் அளவிற்கு நஞ்சு முறிவு சூரணம் சேர்க்க வேண்டும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் இரத்தத்தில் இருக்கின்ற கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்.
**பூண்டு பல் – இரண்டு
**தேன் – ஒரு தேக்கரண்டி
**தண்ணீர் – ஒரு கிளாஸ்
முதலில் இரண்டு வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் உரலில் இதை போட்டு லேசாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பின்னர் வெள்ளைப்பூண்டு சேர்த்து காய்ச்சி தேன் கலந்து குடித்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்.
**எலுமிச்சம் பழம் – ஒன்று
**தண்ணீர் – ஒரு கிளாஸ்
முதலில் எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து இரண்டாக நறுக்கி அதன் சாறை கிண்ணம் ஒன்றிற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் வெது வெதுப்பான தண்ணீரை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் இரத்தத்தில் படிந்துள்ள கழிவுகள் வெளியேறும்.
**மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
**தண்ணீர் – ஒரு கிளாஸ்
பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை மிக்ஸ் செய்து காலை நேரத்தில் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சு கழிவுகள் வெளியேறும்.