குழந்தைகளுக்கு விஷமளித்த தாய்……! பரிதாபமாக உயிரிழந்த சோகம் …..!

Photo of author

By Sakthi

குழந்தைகளுக்கு விஷமளித்த தாய்……! பரிதாபமாக உயிரிழந்த சோகம் …..!

Sakthi

கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள வீரியம்பாளையம் ஊராட்சியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி முத்துலட்சுமி இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளான முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். எட்டு வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகளுக்கும் அந்த அரளி விதையை அரைத்து தண்ணீரில் போட்டு கொடுத்துவிட்டார்.

அதன்பின் தண்ணீர் பிடிக்க வீட்டை விட்டு வெளியே வந்த முத்துலட்சுமி மயக்கமடைந்து விழுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரிடம் விசாரித்து பார்த்ததில் அரளி விதை சாப்பிட்டு இருப்பதும், தன் குழந்தைகளுக்கும் தண்ணீரில் கலந்து கொடுத்திருப்பதும், தெரியவந்தது இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் முத்துலட்சுமி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர், ஆனாலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டார், அவரது குழந்தைகள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் முத்துலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் பற்றி உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.