பள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை !!

0
62

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்ட இருக்கும் நிலையில் , பெற்றோர்கள் மத்தியில் பள்ளிகள் திறப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கடந்த ஆறு மாதமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல்  இருப்பதனால்  மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கல்வி கற்க இயலாமல் உள்ள நிலையில், மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கப்படும் என்றும், கல்வியாண்டு எப்போது ஆரம்பிக்கப்படும் என்றும், பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக வருகிறது.

மேலும் பள்ளிகள் திறப்பது குறித்து அவ்வப்போது ஆலோசனை நடத்த வந்த நிலையில், தற்பொழுது தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாது என்று நேற்று தெரிவித்தனர்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும். மாணவர்களின் எதிர்காலத்தை குறித்த முடிவுகளும் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K