தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு!

0
131

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். தஞ்சாவூரில் போராட்டத்தில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று விடாப்பிடியாக அறிவித்திருக்கும் கர்நாடகத்தின் முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மையை கண்டித்து நேற்றையதினம் தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் பேசிய அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தஞ்சாவூரில் உண்ணாவிரதம் நடத்துவது கர்நாடக அரசையும், கர்நாடகத்தின் முதல்வரையும், எதிர்த்து கிடையாது. அங்கே இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையா மற்றும் சிவகுமார் உள்ளிட்டோரும் மேகதாது அணை கட்டுவதை தமிழ்நாட்டிற்கு எதற்காக கடிதம் மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்பதை எதிர்த்து தான் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

கர்நாடக மாநிலத்தில் இருக்கின்ற விவசாயிகளை பாதுகாப்பதற்காக அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது. அதேபோல தமிழகத்தில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்காக போராட்டம் நடத்தி வருகிறது. காவிரி ஆணையம் அனுமதி கொடுக்காமல் மேகதாது அணையை கட்ட இயலாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இதனை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

இந்த சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அனுமதி எதுவும் இல்லாமல் மாட்டு வண்டியில் சென்றது, நோய்த்தொற்று விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியது, போன்ற புகார்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, கருப்பு முருகானந்தம். பொன் ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.

Previous article10 பாடல்களை வெளியிடும் வைரமுத்து!! ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பங்கு போட்டுக்கொள்ளும் கவிஞரின் பாடல்கள்!!
Next articleவிமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்!