விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்!

0
79
Is it like this at the airport? Tension caused by a Colombian student!
Is it like this at the airport? Tension caused by a Colombian student!

விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்!

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில், இருந்து டெல்லி செல்ல விமானம் தயாராக இருந்தது. அப்போது அங்கு இருந்தவர்களுக்கு எப்பொழுதும் போல பரிசோதனைகள் நடைபெற்றது. அந்த பரிசோதனையில் பிளஸ் டூ படித்து வரும் கொலம்பியா நாட்டைச்சேர்ந்த லூயிஸ் என்ற 19 வயது மகன், அவனது தாய், மற்றும் தங்கையுடன் டெல்லி செல்வதற்காக அந்த விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களையும், இவர்களது உடமைகளையும் ஸ்கேனிங் முறையில் பரிசோதித்தனர். அப்போது அந்த கொலம்பியா நாட்டு சிறுவனை சோதனை செய்தபோது எச்சரிக்கை மணி ஒலித்தது. எனவே அதன் காரணமாக அவனை மட்டும் தனியாக சோதனை செய்தனர். அப்போது அவனது வாலெட் என்று சொல்லப்படுகின்ற மணிபர்சில் ஏதோ சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று இருப்பது தெரியவந்தது.

மேலும் அந்த மணி பர்சை திறந்து பார்த்தபோது அதில் .25 எம்.எம் ரக துப்பாக்கி குண்டு ஒன்று இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயினர். அதன் காரணமாக அந்த குடும்பத்தின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அதன்பின் என்ன நிலவரம் என்று தெரிந்துகொள்வதற்காக அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது நான் 12வது வகுப்பு சென்னையில் தங்கி தாய் மற்றும் தங்கையுடன் தங்கி படித்து வருவதாகவும் விசா காலம் நீட்டிப்பு செய்வதற்காக டெல்லியில் உள்ள, கொலம்பியா நாட்டு தூதரகத்தில் ஒரு சான்றிதழ் வாங்க மூன்று பேரும் டில்லி செல்ல வந்துள்ளதாகவும் கூறினார்கள்.

மேலும் அந்த மாணவனின் நண்பன் ஒருவன் அவனது தாத்தா முறையான உரிமம் பெற்ற துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். தற்போது அவர் இறந்துவிட்டதால் அந்த துப்பாக்கியை அவரது குடும்பத்தினர் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டனர். ஆனாலும் அதில் ஒரு குண்டை மட்டும்  அவரது பேரன் எடுத்து வைத்துள்ளான். அவரது நண்பரான லுயிஸ் நெஸ்டர் அதை தனக்கு வேண்டும் என்று விரும்பி கேட்டதன் காரணமாக, அந்த நண்பன் துப்பாக்கி குண்டை லூயிஸுக்கு கொடுத்துள்ளான்.

அதை அவன் தன் மணிபர்சில் வைத்துள்ளான். இதை அறிந்த அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு அந்த சிறுவன் அறியாமல் செய்த தவறு என்பதன் காரணமாகவும், பள்ளி மாணவனாக இருப்பதன் காரணமாகவும், அவருடைய எதிர்கால நலனை கருதி அவரை மன்னித்து விட்டனர். இருந்தாலும் குண்டு தவறுதலாக வெடித்தால் அதனால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அவர்கள் அந்த சிறுவனுக்கு விளக்கிக் கூறினார்கள். அதன் பின்னர் அந்த மாணவனிடம் கடிதம் எழுதி வாங்கிய போலீசார், அவனை எச்சரித்தது தாய், தங்கையுடன் அனுப்பி வைத்தனர்.