காரில் சிக்கிய 5 கோடி பணம் யாருடையது.? ஆந்திர அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!!

Photo of author

By Jayachandiran

காரில் சிக்கிய 5 கோடி பணம் யாருடையது.? ஆந்திர அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!!

Jayachandiran

கும்மிடிப்பூண்டி எளாவூர் சோதனைச் சாவடியில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்றை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது காவல்துறை கைதுக்கு பயந்து காரில் இருந்த 3 பேரும் தப்பியோடினர். இதையடுத்து வாகனத்தில் இருந்த நான்கு பைகளை சோதனை செய்த போது 5.22 கோடி பணம் சிக்கியது.

 

இந்த பணத்தை சென்னையில் உள்ள முக்கிய புள்ளியிடம் கொடுத்துவிட்டு வருமாறு ஒய்எஸ்ஆர் கட்சியைச் சேர்ந்த ஓங்கோல் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பாலினேனி சீனிவாஸ் ரெட்டி கொடுத்து அனுப்பியதாக காரில் வந்தவர் கூறியிருந்தனர். ஆனால் அந்த பணத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென அமைச்சர் கூறியுள்ளார்.

 

இதையடுத்து வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் நகைக்கடை அதிபர் ஒருவர் பிண்ணனியில் இருப்பது தெரியவந்தது. ஓங்கோலைச் சேர்ந்த நல்லம்மா பாலு என்ற நகைக்கடைக்காரர் சிக்கிய 5.22 கோடி பணம் என்னுடையது என்று கூறியுள்ளார். இதையடுத்து வருமான வரித்துறையினர் பணப்பையில் எம்எல்ஏ பெயர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ஏன்.? பணத்தை கொண்டு வந்தவர்கள் தப்பித்தது ஏன் என்று விசாரித்து வருகின்றனர். இதில் எம்எல்ஏ ஒருவர் பெயர் அடிபட, தனது பெயரை நகைக்கடை கும்பல் போலியாக நடத்தியுள்ளதையும் கூறினார்.