போலீஸ் வேலையில் விரும்பி சேர்ந்தேன் இப்போது விரக்தியில் வெளியேற நினைக்கிறேன்! உதவி ஆய்வாளர் வேதனை!!

0
152

போலீஸ் வேலையில் விரும்பி சேர்ந்தேன் இப்போது விரக்தியில் வெளியேற நினைக்கிறேன்! உதவி ஆய்வாளர் வேதனை!!

திருநெல்வேலி மாவட்டைத்தைச் சேர்ந்த ராஜகுமார் என்பவர் 2011 ஆம் ஆண்டு காவல்துறைக்கான முழு பயிற்சிகளையும் முடித்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். பணியில் இருக்கும் பல்வேறு நெருக்கடிகளும், அடிக்கடி பணியிட மாறுதல்களும், மன அழுத்தமும், பண்டிகை திருவிழா போன்ற நாட்களில் எப்போதுமே விடுமுறை இல்லை. மனைவி மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க நேரமில்லை என்று முகநூல் பக்கத்தில் பணியால் வந்த வேதனைகளை பதிவு வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.

இதுவரை சுதந்திரம் கிடைத்து முக்கால் நூற்றாண்டுகள் கடந்தும் இதுவரை சுதந்திரமே கிடைக்காத பணி காவல் பணி என்று தனது வேலையில் ஏற்பட்ட பல்வேறு கசப்பான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அவரது முகநூல் கூறியிருப்பதாவது:

*  தலைமுடியை கூட நமது விருப்பபடி வைத்துக்கொள்ள முடியாது பணி காவல்பணி.
சொந்த பந்தங்களின் நல்லது, கெட்டதில் கலந்துகொள்ள முடியாத பணி.

*  காலவரையற்ற ஓய்வில்லாத பணி, அரசு விடுமுறை நாட்களை கூட அனுபவிக்க முடியாத பணி, விடுமுறை வாங்கினாலும் அதை நம் தேவைக்கு அனுபவிக்க முடியாத பணி காவல் பணி.

*  அமைச்சு பணியாளர்களின் வேலைகளை நம் மீது சுமத்தி அதை செய்ய தவறினாலோ, மறுத்தாலோ விளக்கம் கேட்டு குறிப்பாணைகள் வழங்கும் பணி.

*  ஒட்டுமொத்தமாக கருத்து சுதந்திரமே இல்லாத பணி, மன அழுத்தம் காரணமாக மக்களிடம் வெறுப்பை சம்பாதிக்கு பணி.

http://m.helo-app.com/s/yMjRvMYRS

இவ்வாறு தனது முகநூலில் காவல் பணியின் நெருக்கடிகளை பற்றி பதிவு செய்துள்ளார். மேலும், தனது பணியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மனக்குமுறலுடன் வெளிப்படுத்தியுள்ளார். காவல்துறையில் பணிபுரிபவர்களின் மனநிலை எந்தளவிற்கு பாதிக்கப்படும் என்பதற்கு இவரின் அனுபவமும் , முகநூல் பதிவுமே சாட்சி.



Previous articleசிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…
Next articleதாயின் சேலையே மகனுக்கு தூக்கு கயிறான அதிர்ச்சி சம்பவம்! விளையாட்டு வினையானது..!!