கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை திருடிய வாலிபர்!! 24 மணி நேரத்தில் போலீசார் பிடிப்பு!!

0
225
#image_title

கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை திருடிய வாலிபர்!! 24 மணி நேரத்தில் போலீசார் பிடிப்பு!!

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 ஐபோன்கள் பறிமுதல்.

திருச்சி தென்னூர் காஜா தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது அஸ்வர் (27) இவர் திருச்சியில் சொந்தமாக புர்கா கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த இரு மாதங்களாக நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த முகமது அல்பான்(22) வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த ஐந்தாம் தேதி உரிமையாளர் அஸ்வர் ஒன்பது சவரன் தங்கச் செயின் மற்றும் 10 ஐபோன்களை ஊழியர் முகமது அல்பானிடம் கொடுத்து சென்னை திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

அல்பான் திருச்சியில் இருந்து பேருந்து மூலமாக சென்னை கோயம்பேட்டிற்கு ஆறாம் தேதி காலை நகைகளுடன் வந்துள்ளார். பின்னர் ஓலா காரை புக் செய்து திருவல்லிக்கேணி பகுதிக்கு செல்ல காத்திருந்தபோது, அங்கே காரில் வந்த மூன்று நபர்கள் அல்பானை தாக்கி வண்டலூர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் ஆல்ஃபாநிடமிருந்த ஒன்பது சவரன் நகை மற்றும் 10 ஐபோன்களை பறித்துவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஆல்ஃபான் உரிமையாளர் அஸ்பரிடம் தெரிவித்துள்ளார்.

உடனே அஸ்வர் நகை மற்றும் செல்போன் பறிப்பு தொடர்பாக சி எம் பி டி காவல் நிலையத்தில் கடந்த ஆறாம் தேதி புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சியில் பதிவான முக அடையாளங்கள் மற்றும் காரின் பதிவு எண்ணை வைத்து திருச்சி சென்ற தனிப்படை போலீசார் அங்கே பதுங்கி இருந்த இரு குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்து, அவர்களிடமிருந்து 1.5கிலோ தங்க நகைகள் மற்றும் 20 ஐபோன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை விட அதிகமாக இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்து புகார் தராரரான அஸ்வரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அஸ்வர் துபாய் போன்ற வெளிநாடுகளில் தங்கம் மற்றும் ஐபோன்களின் விலை குறைவு என்பதால், அங்கிருந்து தங்கம் மற்றும் ஐபோன்களை வாங்கி வந்து தமிழ்நாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதேபோல வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த 20 ஐபோங்கள் மற்றும் 1.5கிலோ தங்கத்தை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு நபரிடம் கொடுக்க ஊழியர் அல்பானிடம் கொடுத்து அனுப்பியதாகவும் ஆனால் பைக்குள் 9 சவரன் செயின் மற்றும் பத்து ஐபோன்கள் இருப்பதாக மட்டுமே ஊழியரிடம் தெரிவித்ததாகவும் உரிமையாளர் அஸ்வர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சி திருவெறும்பூர் தாலுகா சேர்ந்த அஷ்ரபுதீன் (38) மற்றும் வசந்தகுமார் என்பது தெரியவந்தது.

இதில் அஷ்ரபுதின் ஏற்கனவே அஸ்பரிடம் வேலை பார்த்து வந்ததும், சில மாதத்திற்கு முன்னால் வேலையை விட்டு நிறுத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது மேலும் அஸ்பர் தங்கம் விற்பனை செய்வது பற்றி நன்கு அறிந்தமையால், முக்கிய குற்றவாளியான பிரவீன் என்பவருடன் இணைந்து பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதை எடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய நபரான பிரவீனை தேடி வருகின்றனர்.

Previous articleஎன்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து பாடங்களை மாற்றியமைக்காக மத்திய அரசுக்கு எதிராக மாநில கல்வி அமைச்சர் வி சிவங்குட்டி போர்க்கொடி!!
Next articleசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த போட்டி டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!!!