மது அருந்திவிட்டு காவலர் அதிகாரி ஒருவர் கார் ஒட்டி விபத்தினை ஏற்படுத்தியதோடு, மக்களை அச்சுறுத்திய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்தில், காவலராக பணியாற்றுபவர் லோகநாதன். இவர் (வயது 28). தந்தை பெயர் கருப்பையா.
இவர் திருமாநிலையூர் பகுதியில் வசிப்பவர், இவர், ஏற்கனவே கரூர் நகர போக்குவரத்து காவலராக பணியாற்றிய நிலையில், தற்போது சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை, இவர் சொகுசு ஸ்விப்ட் காரினை கரூரிலிருந்து தாந்தோன்றிமலையை கடந்து நீதிமன்றத்தினை தாண்டி சென்ற போது, தாந்தோன்றிமலை, காளியப்பனூர், நீதிமன்றம் பேருந்து நிறுத்தம் ஆகிய பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் மீது தன்னுடைய சொகுசு காறினால் மது போதையினால் மோதினார்.
மோதிய சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அங்கிருந்த மக்கள் அனைவரும் மிகவும் பதற்றத்தை சந்தித்தனர்.