பிரபல நடிகரின் மகனை கண்டித்த போலீசார்!! யாரா இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னு தான்பா!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2002 ஆம் “துள்ளுவதோ இளமை” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் காதல் கொண்டேன், திருடா திருடி என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்த தனுஷ் அவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிறந்தனர். இதன் பிறகு அவர்களது மகன்கள் தாய் தந்தை என்று இருவரிடமும் மாறி மாறி வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷ் சர்ச்சைக்கு பேர் போன நடிகராக இருக்கும் நிலையில் அவரது மகனும் தற்பொழுது புது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தனுஷின் மூத்த மகனான யாத்ராவுக்கு 17 வயதே ஆகும் நிலையில் அவர் சாலையில் பைக் ஓட்டுவது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
போக்குவரத்து விதி படி 18 வயதிற்குள் இருப்பவர்கள் வாகனங்களை இயக்க கூடாது. ஆனால் யாத்ரா அவர்கள் ஹெல்மெட் அணியாமல் ஆர்15 ரக பைக்கை பயிற்சியாளர் உதவியுடன் இயக்குவது போன்ற புகைப்படம் வைரலான நிலையில் பலர் இது குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க போக்குவரத்து துறை காவலர்கள் நடிகர் தனுஷ் இல்லத்திற்கு சென்றனர். விசாரணையில் யாத்ரா பைக் ஓடியது உறுதியானதால் போக்குவரத்து விதிகளை மீறி பைக்கை இயக்கிய யாத்ராவுக்கு ரூ.1000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் மகன் என்றாலும் ரூல்ஸ் ஒன்று தான் என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
பிரபல நடிகரின் மகனை கண்டித்த போலீசார்!! யாரா இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னு தான்பா!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2002 ஆம் “துள்ளுவதோ இளமை” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் காதல் கொண்டேன், திருடா திருடி என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்த தனுஷ் அவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதன் பிறகு அவர்களது மகன்கள் தாய் தந்தை என்று இருவரிடமும் மாறி மாறி வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷ் சர்ச்சைக்கு பேர் போன நடிகராக இருக்கும் நிலையில் அவரது மகனும் தற்பொழுது புது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தனுஷின் மூத்த மகனான யாத்ராவுக்கு 17 வயதே ஆகும் நிலையில் அவர் சாலையில் பைக் ஓட்டுவது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
போக்குவரத்து விதி படி 18 வயதிற்குள் இருப்பவர்கள் வாகனங்களை இயக்க கூடாது. ஆனால் யாத்ரா அவர்கள் ஹெல்மெட் அணியாமல் ஆர்15 ரக பைக்கை பயிற்சியாளர் உதவியுடன் இயக்குவது போன்ற புகைப்படம் வைரலான நிலையில் பலர் இது குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க போக்குவரத்து துறை காவலர்கள் நடிகர் தனுஷ் இல்லத்திற்கு சென்றனர். விசாரணையில் யாத்ரா பைக் ஓட்டியது உறுதியானதால் போக்குவரத்து விதிகளை மீறி பைக்கை இயக்கிய யாத்ராவுக்கு ரூ.10,00 அபராதம் விதித்து போக்குவரத்து துறை காவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து நடிகர் மகன் என்றாலும் ரூல்ஸ் ஒன்று தான் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.