மின்னல் தாக்கியதில் 10 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலி!

0
148

மின்னல் தாக்கியதில் 10 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலி!

உகண்டா நகரில் 10 குழந்தைகள் மின்னல் தாக்கி இறந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

உகண்டாவில் உள்ள Arua என்ற பகுதியில் கனத்த மழை பெய்ததால் அருகில் உள்ள குடிசையில் சென்று தங்கி இருந்த 10 குழந்தைகள் மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.

அன்று மாலை 10 குழந்தைகளும் Odramacaku என்ற இடத்தில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த மழை பெய்ததால் அருகில் உள்ள குடிசையில் சென்று தங்கி உள்ளனர்.

திடீரென வந்த மின்னல் அனைவரையும் தாக்கியுள்ளது.13 முதல் 15 வயதுடைய ஒன்பது குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். மேலும், மற்றொரு குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குழந்தைகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கு இருந்த Arua மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது

உகாண்டாவின் வடமேற்கு பகுதியில் இடி மற்றும் மின்னலுடன் கடுமையான மழை பெய்து வருகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு இதுபோல் 18 பள்ளி குழந்தைகள் ஒரே வாரத்தில் மின்னல் தாக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇனி புகார் அளிக்க காவல்நிலையம் செல்லத் தேவையில்லை:!
Next articleஇத்தனை மில்லியன் பேருக்கு இணையம் வழி கல்வி வசதி இல்லையா?