வருகிற 2026ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அனுதினமும் எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி சர்ச்சையில் மாட்டிக்கொள்கின்றனர். அதனை தங்களுக்கு சாதகமாக அதிமுக, தவெக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் பயன்படுத்திக்கொள்கின்றன.
அனுதினமும் திமுக நிர்வாகிகள் செய்யும் தவறுகளால் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி போன்றோர் சர்ச்சைகளுக்கு உள்ளாகின்றனர். அதேநேரத்தில் காவல்துறையும் தங்கள் பங்குக்கு எதாவது ஒன்றை செய்து திமுக அரசை சிக்கலில் மாட்ட வைத்துவிடுகிறது. குறிப்பாக சாலையில் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களை லைசென்ஸ் இருக்கா, ஹெல்மெட் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா என்று சோதனை செய்து மக்களுக்கு பிரச்சனையை கிளப்புகிறார்கள்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மாதிரி போலீசார் மக்களை தொந்தரவு செய்தால் அது வெறும் காவல் துறையை மட்டும் பாதிக்காது. மாறாக தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சியையும் வெகுவாக பாதிக்கும். எனவே தேர்தல் நேரத்தில் இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு ஆளும்கட்சி கடிவாளம் விதித்துள்ளது.
மாறாக போக்குவரத்து மிதிமீறல்களில் ஈடுபடும் பொதுமக்கள் அனைவரையும் ஒரு இடத்தில் அமரவைத்து போக்குவரத்து விதிமீறல்களை நீங்கள் மீறுவதால் எந் மாதிரியான பின் விளைவுகள் ஏற்படும் என்பதை பாடமாக எடுக்கும்படி அரசு காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் இனி நிறைய இடங்களில் காவலர்கள் பொதுமக்களை ஹெல்மெட் போடவில்லை,வண்டிக்கு லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லை என்று தொல்லை படுத்தும் நிகழ்வு அதிகம் நடக்காது என்றும் சொல்லப்படுகிறது.