ஆயுள் மசாஜ் செய்ய சொன்ன போலீசார்! நீதி கேட்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்!

Photo of author

By Rupa

ஆயுள் மசாஜ் செய்ய சொன்ன போலீசார்! நீதி கேட்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்!

Rupa

Police told to do life massage! Shame on the woman who went to seek justice!

ஆயுள் மசாஜ் செய்ய சொன்ன போலீசார்! நீதி கேட்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்!

இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு எதிரான அதிக வன்கொடுமைகள் நடந்து வருகிறது.அந்தவகையில் பெண்கள் பயணம் செய்யும் இடங்கள்,பள்ளிகள்,கல்லூரிகள் என ஆரம்பித்து தற்போது நடந்த குற்றங்களை கூறி நீதி கேட்க செல்லும் இடத்தில் கூட தற்போது பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடந்து வருகிறது.அந்தவகையில் தற்பொழுது நீதி கேட்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலநிலை கண்டு பெண்கள் அனைவரும் கொந்தளித்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை பொறுப்பில் உள்ளவர் தான் சண்முகம்.ஓர் பெண்ணுக்கு குடும்பத்தில் அதிக காலமக தகறாரு ஏற்பட்டு வந்துள்ளது.அந்த பெண் பொறுமையை இழந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்,அப்பொழுதுதான் நமக்கு நீதி கிடைக்கும் என்று எண்ணியுள்ளார்.இவர் தனது வீட்டில் அருகில் இருக்கும் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கு பணியிலிருந்த காவல் அதிகாரி சண்முகம் இந்த பெண்ணை தனியாக விசாரித்துள்ளார்.இந்த பெண்ணும் தனக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார்.காவல் அதிகாரி நீதி அளிக்காமல்,நீ ரொம்ப அழகா இருக்க என்று முதலில் கூறியுள்ளார்.அதனையடுத்து அந்த பெண்ணிடம் நான் நல்ல வக்கீல் பார்க்கிறேன்.நீ உன் கணவருக்கு விவாகரத்து அளித்து விட்டு என்னோடு வந்துவிடு என்றவாறு ஆபாசமாக அந்த பெண்ணிடம் பேசியுள்ளார்.அதுமட்டுமின்றி ஆயில் மசாஜ் செய்ய தெரியுமா என்று கேட்டுவிட்டு அவர் செல்போன் எண்ணையும் அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.அந்த பெண் நீதி கேட்ட வந்த இடத்தில் போலீசாரே இவ்வாறு கூறியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதனையடுத்து மீண்டும் அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறார் அப்பொழுது அவரது கணவர் வீட்டில் வைத்திருந்த நகை அனைத்தையும் எடுத்து ஓடி விட்டார்.அப்போது அங்குள்ள அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.அந்த பெண் கண்ணீர் விட்டபடியே காவல் நிலையத்தில் தனக்கு நடந்த அவலத்தை கூறியுள்ளார்.பிறகு அங்குள்ளவர்கள் அந்த பெண்ணை இறைவி பெண்கள் பாதுகாப்பு என்ற இயக்கத்திடம் நடந்ததை கூறி முறையிட்டுள்ளனர்.

அந்த தலைமை காவல் அதிகாரிக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணி அந்த இயக்கத்தினர் அந்த பெண்ணை போலீசாருக்கு அழைப்பு விடுத்து பேச வைத்தது கால் ரெகார்டு செய்து வைத்துக்கொண்டனர்.பிறகு எஸ்.பி அலுவலகத்துக்கு சென்று நடந்ததை கூறி புகார் அளித்துள்ளனர்.அதனடிப்படையில் தற்போது தலைமை காவல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.போலீசார்கள் ஓரிருவர் செய்யும் தவறுகளால் அனைத்து காவலர்களுக்கும் கெட்ட பெயர் உண்டாகும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது