திருட்டுத்தனமாக கஞ்சாவை பயன்படுத்திய போலீஸ்!..மூன்று பேர் அதிரடி சஸ்பெண்டு…

Photo of author

By Parthipan K

திருட்டுத்தனமாக கஞ்சாவை பயன்படுத்திய போலீஸ்!..மூன்று பேர் அதிரடி சஸ்பெண்டு…

Parthipan K

Police who used ganja secretly!..Three people suspended

திருட்டுத்தனமாக கஞ்சாவை பயன்படுத்திய போலீஸ்!..மூன்று பேர் அதிரடி சஸ்பெண்டு…

புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் மோப்பநாய் பிரிவு அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்தில் உள்ள அனைத்து மோப்ப நாய்களையும் பராமரிக்க சில போலீஸ்காரர்கள் உள்ளார்கள்.இப்பிரிவில் பணியாற்ற வந்த போலீஸ்காரர்கள் சேவியர் ஜான்சன்,பழனிசாமி,அஸ்வித் ஆகிய மூன்று பேர் கஞ்சா புதைத்ததாக புகார் எழுப்பப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் மூன்று போலீஸ்காரர்களையும் பணியிடை நீக்கம் செய்தார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே.மேலும் அவர்களிடம் பல விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் மூன்று பேரும் போதைபொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக உயர் அதிகாரியிடம் கேட்ட போது மூன்று பேரும் பணியில் இருந்த போது கஞ்சா புகைத்ததன் அடிப்படையிலேயே அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மோப்பநாய்களுக்கு பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை அந்த மூன்று போலீஸ்காரர்களும் பயன்படுத்தியிருந்தார்கள்.

மேலும் கஞ்சா இருப்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கஞ்சா அளவு குறைந்ததை போலீஸ்அதிகாரிகள் ஆய்வின் போது கண்டுபிடித்தனர்.அதன் பேரில் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.போலீஸ்காரர்களே திருட்டு தனமாக கஞ்சாவை எடுத்து பயன்படுத்திய சம்பவம் காவல் அதிகாரிக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.