ஈரோடு மாவட்டத்தில் போலீஸ்காரரின் மகன் பரிதாபமாக பலி! அப்பகுதியில் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ்காரரின் மகன் பரிதாபமாக பலி! அப்பகுதியில் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கரண் (20) இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். மேலும் கண்ணன் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள்லாக  பணிபுரிந்து வருகிறார். மேலும் இந்நிலையில் கரன் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் முடுக்கன் துறையில் இருந்து தொட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக லாரி என்று வந்து கொண்டிருந்தது.

அப்போது  கரணின் மோட்டார் சைக்கிளும் எதிரில் வந்த லாரியும்  எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது  விபத்தில் தூக்கி வீசப்பட்ட கரண்  படும்காயம்  அடைந்தார் இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து  கரண்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இது பற்றி பவானிசாகர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த  தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.