தேர்தலின் போது இலவசத்தை அள்ளிக் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!

0
133

தேர்தலின் போது இலவசத்தை அள்ளிக் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!

தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு புதிய விதிகளை வகுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதாவது தேர்தலின் போது தேர்தலில் எப்படியாவது முன்னிலை பிடித்து விட வேண்டுமென்று ஒவ்வொரு கட்சியினரும் இலவச வாக்குறுதிகளை போட்டி போட்டுக் கொண்டு அள்ளிக் கொடுப்பர்.இதுபோன்ற இலவச வாக்குறுதிகள் அதிகம் கொடுப்பதால் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில்,தேர்தல் ஆணையம் இதனை கட்டுப்படுத்துவதற்கு ஓர் புதிய விதியினை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் ஓர் கடிதத்தை எழுதி உள்ளது.அந்த கடிதத்தில் தேர்தலின் போது இலவச வாக்குறுதி கொடுத்தால் அதனால் ஏற்படும் பொருளாதார சிக்கல் பற்றியும்,அந்த இலவச வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரத்திற்கான விளக்கத்தினை கொடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.மேலும் அனைத்துக் கட்சிகளும் வருகின்ற 19ஆம் தேதிக்குள் இந்த புதிய விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Previous articleதமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Next articleமீண்டும் வந்துவிட்டாரா நித்தியானந்தா:? ஆசிரமம் இடிப்பு!! பல்லடம் அருகே பெரும் பரபரப்பு!