தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன??

Photo of author

By CineDesk

தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன??

CineDesk

Political parties turning to southern districts!! What will happen in Lok Sabha elections??

தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன??

தமிழகத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் நான்கு கட்சிகள் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறது. அதாவது, வடக்கு திசையில் திமுகவின் பலம் உயர்ந்துள்ளது.

அதேப்போல, மேற்கு திசையில் எப்போதுமே அதிமுக தான் கால் பதித்துள்ளது. தெற்கில் திமுக மற்றும் அதிமுக என இரண்டுமே சமமான நிலையில் உள்ளது.

இதனைப்போலவே, கன்னியாகுமாரி, திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பலம் பிடித்திருக்கிறது.

அடுத்த ஆண்டு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு அனைத்து கட்சிகளும் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பாஜக மாநில தலைவரான அண்ணாமலை “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இந்த பாத யாத்திரையின் போது மக்களிடம் பிரதமர் மோடியின் சேவைகளை பற்றி கூறி உள்ளார்.பிரதமரின் சேவைகளை புத்தகமாக தொகுத்து அனைவருக்கும் வழங்கி வருகிறார்.

அதேப்போல, வருகின்ற இருபதாம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் மாநாடு ஒன்று மதுரையில் நடைபெற உள்ளது.

மதுரையில் தான் எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் மன்றம் துவங்கப்பட்டு, அவரின் கட்சி ஆரம்பிப்பதற்கு தொடக்க புள்ளியாக இருந்தது. இதை மனதில் வைத்துதான் எடப்பாடி மாநாட்டை இங்கு நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து திமுகவும் ஒன்றும் சலித்தவர்கள் கிடையாது என்பதை உண்மையாக்கும் விதமாக வரும் 19  ஆம் தேதி நடக்க உள்ள ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள மீனவர்கள் மாநாட்டில் முதல்வர் கலந்து கொள்ள இருக்கிறார்.

அதில், மீனவர்கள் தொடர்பான விவரங்கள் மட்டும் இல்லாமல், கட்சி சம்மந்தப்பட்ட வேலைகளுக்கும் சில காய்களை நகர்த்த இருக்கிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து நேற்று கொடநாடு கொள்ளை வழக்கு குறித்து தேனி மாவட்டத்தில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பாமக தலைவர் டிடிவி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வாறு ஒவ்வொரு கட்சியும் மக்களவைத் தேர்தலில் பதவியை பிடிப்பதற்கு இறங்கி வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.