தவெக தலைவர் விஜய் இரண்டாம் ஆண்டு அரசியல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கிய மகிழ்ச்சியை தனது கட்சி தொண்டர்களுடன் கடிதம் மூலம் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம். ஒரு வெற்றி பெரும்படையின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் தவெக கட்சி தொடங்கி இன்று இரண்டாம் ஆண்டு அடியெடுத்து எடுத்து வைக்கப் போகிறோம்.
இதுவரை மக்கள் இயக்கமாக மக்களுக்காக பயணித்து வந்த நாம், அரசியல் களத்தை கையாளத் தொடங்கி இப்பொழுது இரண்டாவது வருடங்களில் அடியெடுத்து வைக்கிறோம். உறுப்பினர் சேர்க்கை முதலிட்ட பணிகளை ஒவ்வொரு அடியாக பார்த்து கவனமாக அளந்து வைக்கிறோம். மக்களுக்கான அரசியலை மக்களுக்காக மக்களோடு மக்களாக நின்று அறிவித்தோம். அது நம் முதல் மாநாடு எனினும் நமது வெற்றிக் கொள்கை திருவிழாவாக அமைந்திருந்தது.
அம்மாநாட்டில் நம் கொள்கைகளையும், சமூக நீதிக் கொள்கைகளையும் அறிவித்திருந்தோம். அதில் ஐம்பெரும் கொள்கை தலைவர்களையும் முன்னிறுத்தி இருந்தோம். தற்சமயம் நம் கட்சிக்கு தேவையான நிர்வாகிகளையும், பொறுப்பாளர்களையும் நிர்வகித்து வருகிறோம். நம் கட்சியின் அரசியல் ரத்த நாளங்களான கழகத் தொண்டர்களை அரசியல் மையப்படுத்தி மக்களுக்குத் தொண்டு செய்யும் தலைவர்களாக மாற்றுவதே எப்பொழுதும் நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கின் முதல் அடிதான் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல்.
இன்று நம் கட்சி தோழர்கள் இணைந்து மக்கள் நல பணித் திட்டங்களை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்கள் பணி செய்யும் வாயில் ஒவ்வொரு வீட்டில் உள்ள அனைவரிடத்தும் நம் கொடியை நிலை நாட்டுவது நம் தோழர்களின் கடமையாகும். இதனை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்று எனக்கு தெரியும். இருப்பினும் நினைவூட்டுவதற்கே இக்கடிதம். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சக்தியுடன் நாம் கரங்கோர்த்து நம் வலிமையை பறைசாற்றி அதிகாரப்பூர்வமாக வெளிக்காட்ட போகிறோம். அதற்காக இப்போது இருந்தே நாம் இணைந்து உழைக்க வேண்டும். மக்களோடு மக்களுக்காக தேவையான பணிகளை செய்தால் தான் நாம் அரசியலில் கிழக்கு திசையாவும், கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் நம் கட்சி உருவெடுக்கும். மற்றவரைப் போல் வாயில் படம் ஓட்டாமல் நாம் உண்மையாக உழைக்க வேண்டும்.
1967 இல் ஒரு பெரிய அதிர்வுடன் அரசியல் பெரும் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அதைத் தொடர்ந்து 1977லும் மாற்றம் பேரதிர்ச்சியாக திகழ்ந்தது. இவ்விரு பெரும் மாற்றமே அப்பொழுது இருந்த திறன்மிக்கவர்களின் உழைப்பே காரணமாக அமைந்து இருந்தது. 2026 ஆம் ஆண்டு நம் மக்களோடு இணைந்து அச்சாதனை புரிவோம். மக்களும் மனதளவில் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மண்ணைச் சேர்ந்த இந்த மகன் உங்களோடு நிற்கிறேன். நாம் நம் மக்களோடு இணைந்து களத்தில் பணியாற்றுவோம். நம் கொடி கூறும்படி இரட்டைப்போர் யானை பலத்தோடு எதிரிகளை வெல்வோம். வாகைப்பூ மாலை சூட்டுவோம். வெற்றி நிச்சயம்! அன்புடன் விஜய் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.