அரசியல் ஒரு சாக்கடை! துப்புரவு பணியாளராக வலம் வரும் கமல்!

Photo of author

By Rupa

அரசியல் ஒரு சாக்கடை! துப்புரவு பணியாளராக வலம் வரும் கமல்!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர். எனவே மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் பின்பற்றி வருகின்றனர். இந்த ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் அக்கட்சியின் மூத்த தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். அந்தவகையில் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் சில நடுநிலை கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியை யார் கைபற்றப்போவது என்னும் பெரிய குளறுபடியே நடக்கிறது. அந்தவகையில் மக்கள் மீதி மய்யம் கட்சியின் தலைவர் தனித்து போட்டியிடுவதாக முதலில் கூறினார். அதன்பின் முப்பெரும் கூட்டணி என்று சரத்குமாருடன் கூட்டணி வைத்துக்கொண்டார்.கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குகளை திரட்ட ஆட்டோவில் சென்றார். அதன்பின் மக்களோடு மக்களாக தன்னை காட்ட வேண்டும் என்பதற்கு பேருந்தில் பயணித்தும், அவர்களுடன் அமர்ந்து தேநீர் பருகியும் பிரச்சாரம் செய்தார்.

தேர்தளுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவை ஆதரித்து பரப்புரை ஆற்றினார்.அப்போது அவர் பேசியது,மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு.என்னை 5 வயதிலிருந்தே தமிழக மக்கள் அவர்களின் தொழில் வளர்த்திருக்கிறார்கள்.

நம்மை பார்த்து பயந்த காரணத்தினால் மட்டுமே எதிர்கட்சியினர் நமக்கு தொந்தரவு அளிக்கின்றனர். இப்போதைய அரசியல்வாதிகள் மக்களின் பணத்தை கொள்ளையடுத்து சுவிஸ் பாங்கில் போட்டுள்ளனர். அதனால் நாங்கள் அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்துள்ளோம். இன்றே சுத்தம் செய்யவில்லை என்றால் நாளைய தலைமுறை எங்களைத் திட்டும் என்று கூறினார்.நான் ஹெலிகாப்டர்களில் செல்வதை எதிர் கட்சியினர் கேளி செய்கின்றனர்.அடுத்த முறை அவர்களுக்கு அது தேவைப்படும் எனக் கூறினார்.