எலான் மஸ்க் எடுத்த வாக்கெடுப்பு! மீண்டும் செயல்பட தொடங்கிய டிரம்பின் ட்விட்டர் கணக்கு!
அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் தேதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.அதனை அடுத்து டிரம்ப் அவருடைய சமூக வலைதளத்தின் மூலம் வன்முறையை தூண்டியதாக கூறப்பட்டது.
அதனால் பேஸ்புக் ,ட்விட்டர் ,இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் டிரம்பின் கணக்குகளை முடக்கினர்.அப்போது ட்விட்டர் நிறுவனம் டிரம்புக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது. அதனால் டிரம்ப் சோசியல் ட்ரூத் என்ற பெயரில் தனக்கென சொந்தமாக சமூகவலைத்தளத்தை உருவாக்கினார்.
இந்நிலையில் அண்மையில் உலக பணக்காரர் ஆன எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் அதனை தொடர்ந்து அவர் ட்விட்டரில் டிரம்புக்கு விதிக்கப்பட்ட நிரந்தர தடை திரும்ப பெறுவது தொடர்பாக திட்டம் மேற்கொண்டு வந்தார்.
அதனையடுத்து டிரம்ப் ட்விட்டர் கணக்கை மீண்டும் அனுமதிக்கலாமா இல்லை வேண்டாமா என எலான் மஸ்க் ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார்.அதில் மீண்டும் டிரம்ப் ட்விட்டரை பயன்படுத்த ஆதரவு பெருகியது.
அதனால் டிரம்ப் தனது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை எலான் மஸ்க் நேற்று நீக்கினார்.இதனை தொடர்ந்து மீண்டும் டிரம்பின் ட்விட்டர் கணக்கு செயல்பட தொடங்கியது.