கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தையே அதிர வைக்கக்கூடிய பாலியல் வழக்கு ஒன்று வெளியுலகிற்கு தெரிய வந்தது.
இந்த பாலியல் வழக்கில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றவாளிகள் சமூக வலைதளங்கள் மூலமாக பல மாவட்டங்களில் இருக்கக்கூடிய பெண்களை ஏமாற்றி அவர்களை தங்களுடைய பாலியல் வன்புணர்வுக்கு உணவாக மாற்றி இருக்கின்றனர். மேலும் அதனை வீடியோ பதிவு செய்து மீண்டும் மீண்டும் அந்த பெண்களை பாலியல் தொந்தரவு செய்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இந்த வழக்கு வெளியுலகிற்கு தெரிவதற்கு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பெண்கள் கொடுத்த புகார் தான் காரணமாக அமைந்திருக்கிறது. இந்த புகாரின் அடிப்படையில் முதல் கட்டமாக திருநாவுக்கரசு சபரி ராஜன் வசந்த் குமார் சதீஷ் மணிவண்ணன் ஆகிய 5 குற்றவாளிகளை 2019 ஆம் ஆண்டு காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் இந்த வழக்கானது சிபிசிஐடி இடம் இருந்து சிபிஐ வசம் மாற்றப்பட்டது.
அதன்பின் சிபிஐ, 2021 இல் ஹேரேன் பால், பாபு , அருளானந்தம், அருண்குமார் என மீண்டும் 4 பேரை குற்றவாளிகளாக கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வளத்திற்கான முழு விசாரணையும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி முன் நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பு வாதங்களும் மற்றும் அரசு தரப்பு வாதங்களும் தற்பொழுது கேட்டு நிறைவடைந்து விட்டதாகவும் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் மீதான தீர்ப்பு வருகிற மே 13 ஆம் தேதி வழங்கப்படும் என்றும் நீதிபதி நந்தினி தெரிவித்திருக்கிறார்.