10 நோய்களை அசால்ட்டாக குணப்படுத்தும் மாதுளை இலை!! விரைவில் ரிசல்ட் கிடைக்க இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

10 நோய்களை அசால்ட்டாக குணப்படுத்தும் மாதுளை இலை!! விரைவில் ரிசல்ட் கிடைக்க இப்படி யூஸ் பண்ணுங்க!!

Divya

மாதுளம் பழம் போன்று அதன் இலை,பூக்கள் போன்றவை அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகள் ஆகும்.இதில் மாதுளை இலை பல மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த இலையை வைத்து கஷாயம்,டீ போன்றவற்றை செய்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

1)இருமல் சளி

மாதுளை இலையை பொடித்து ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் சளி,இருமல் பாதிப்பு குணமாகும்.

2)வயிற்று வலி

மாதுளை இலையை அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை வடிகட்டி பருகினால் வயிற்று வலி பாதிப்பு முழுமையாக குணமாகும்.

3)தூக்கமின்மை

இரவில் ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலில் ஒரு தேக்கரண்டி மாதுளை இலை பொடி போட்டு கலந்து பருக வேண்டும்.இந்த பால் தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

4)தோல் அலர்ஜி

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மாதுளை இலை போட்டு காய்ச்சி பருக வேண்டும்.இப்படி செய்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.மாதுளை இலை பானத்தை பருகினால் சொறி,சிரங்கு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

5)இரத்த சோகை

மாதுளை இலையை அரைத்து பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் இரத்த சோகை நோய் பாதிப்பு குணமாகும்.

6)உயர் இரத்த அழுத்தம்

ஒரு தேக்கரண்டி மாதுளை இலை பொடியை பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து பருகினால் உயர் இரத்த அழுத்தம் குணமாகும்.

7)செரிமானப் பிரச்சனை

மாதுளை இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து பருகினால் செரிமானக் கோளாறு முழுமையாக குணமாகும்.

8)முடி வளர்ச்சி

மாதுளை இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்து ஆறவைத்து தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

9)தூக்கமின்மை

மாதுளை இலை பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும்.மாதுளை இலை பொடியை பாலில் கலந்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

10)நோய் எதிர்ப்பு சக்தி

மாதுளை இலையை கொண்டு கஷாயம் செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.