அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பொங்கிய பொன்னார் !!

0
216
Pon Radhakrishnan Condemn Kanchipuram District Collector-News4 Tamil Online Tamil News Chennal3
Pon Radhakrishnan Condemn Kanchipuram District Collector-News4 Tamil Online Tamil News Chennal3

அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பொங்கிய பொன்னார் !!

காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தரிசிக்க வருவதை பொது மக்களின் பாதுகாப்பு கருதி முதியோர், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் தவிர்க்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தி வரதர் தரிசனத்திற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொது மக்கள் வந்து கொண்டிருப்பதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் தடுமாறி வருகிறது சில தினங்களுக்கு முன்பு தான் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, ‘முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் காஞ்சிக்கு வர வேண்டாம்  என்று காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியரே பத்திரிகைகள் மூலம் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு அந்நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

ஏறத்தாழ நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் நபர்களுக்கு மேல் வந்து கொண்டிருக்கும் இந்நிலையில் நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் காஞ்சியை அடையும் பக்தர்களின் எண்ணிக்கை விறுவிறுவென்று கூடிக் கொண்டிருக்கிறது. இதை கணக்கில் கொண்டே கலெக்டர் காஞ்சிபுரம் அத்தி வரதரை  தரிசிப்பதை  ‘முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என பத்திரிகைகள் மூலம் கேட்டுக் கொண்டிருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்புக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மாவட்ட ஆட்சியர் பொன்னையனை அழைத்து கண்டித்தாக கூறப்படுகிறது.

மேலும் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பை தருவதை விட்டு விட்டு தவிர்க்க வேண்டும் என அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது என கூறிய முதலமைச்சர், இதனையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று அத்திவரதரை தரிசிக்க வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அத்திவரதரை தரிசிப்பதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்திருப்பதற்கு கடும் கண்டணம் தெரிவித்தார்.

“தமிழ்நாட்ல ஒரு ஆன்மிக விழா நடக்குது. 45 நாள் பாதுகாப்பு தர உங்களால் முடியாதா…மக்களை காஞ்சிபுரத்துக்கு வரவேணாம்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருக்கீங்க. அதைவிட உங்களுக்கு என்ன வேலை என்று பொங்கித் தீர்த்து விட்டார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleதோனி நம்பர் 2, மோடி நம்பர் 1 ! தோனியை முந்தினார் மோடி!
Next articleமணிரத்னம் எடுத்த திடீர் முடிவு! ஏன் இந்த விபரீத முயற்சி? குழப்பத்தில் தமிழ் திரையுலகம்