புதுச்சேரி: இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க பிறப்பித்த உத்தரவு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

0
206

புதுச்சேரி: இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க பிறப்பித்த உத்தரவு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

புதுச்சேரியில் ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க துணை நிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

புதுச்சேரியின் அனைத்து ரேசன் கார்டுகளுக்கு அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையல் பணத்திற்கு பதிலாக இலவச அரிசியை வழங்குவது தொடர்பாக பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான அறிக்கையை முதல்வர் நாராயணசாமி துணை நிலை ஆளுநரான கிரண்பேடியை சந்தித்து தெரிவித்துள்ளார்.

இதற்கு கிரண்பேடி, தொடர்ந்து ரேசன் கார்டுகளுக்கு பணமே கொடுக்கலாம் என்று கூறி மறுத்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்த தகவல் வெளியானதை அடுத்து, கிரண்பேடி தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்கு நான் தடையாக இல்லை என்றும், மேலும் பொது மக்கள் நல்ல தரமான அரிசியை வாங்குவதற்கு இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க கூறினேன் என்றும் கூறினார். மக்களுக்கான இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்பது பொய்யான தகவல் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இவ்வழக்கில் முதலமைச்சர் நாராயாணசாமி தொடர்ந்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Previous articleஅஜித்துக்கு கட்டுப்பாடு விதித்த ஃபெப்சி: ஆர் கே செல்வமணி உறுதி !
Next articleஆரம்பமே அசத்தல் – உலகக்கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா !