“என்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக தங்க பதக்கத்தை ஏற்க மறுத்துள்ளேன்” – மாணவி ரபிஹாஅதிரடி

0
115

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் புதுச்சேரிக்கு வருகைதந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்., துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சில மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சி மாணவர்களுக்கும்  பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எனவே பாதுகாப்பு நடவடிக்கையாக , விழாவிற்கு வந்த சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவியை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியே அழைத்து விசாரித்து மாணவரை உள்ளே அனுப்பினார்கள்.

விழாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கேரள மாணவி ரபிஹாவை அவரது தலையில் அணிந்து வந்த ஹீஜாப்பை பாதுகாப்பு அதிகாரிகள் அகற்ற கூறியுள்ளனர். அதற்கு மாணவி  மறுப்பு தெரிவித்ததால் அவர் வெளியேற்றப்பட்டார்.

இவர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்றவர். ஜனாதிபதி புறப்பட்டு சென்ற பின்னரே அந்த மாணவி உள்ளே அனுமதிக்கப்பட்டார்.  இதை தொடர்ந்து  மாணவி ரபிஹாவுக்கு பட்டம் வழங்கபட்டது ஆனால்  மாணவி தனக்கு வழங்கிய பதக்கத்தை வாங்க மறுத்து திருப்பி கொடுத்தார். தான் ஹிஜாப் அணிந்ததற்காக                                            அனுமதிக்கப்படாததால் பதக்கத்தை திருப்பி  கொடுத்துள்ளார். CAA மற்றும் NRC எதிராக போராடும் ஒவ்வொருவருக்கும் ஆதரவளிக்கும் விதமாக இந்த பதக்கத்தை வாங்க மறுத்துள்ளதாகவும் மாணவி ரபிஹா தெரிவித்துள்ளார்.

Previous articleமீண்டும் ஏற்பட்ட தீ விபத்து 9 பேர் பலியான பரிதாபம்?
Next articleஜார்க்கண்டில் ஆட்சியை இழக்கிறது பாஜக?