ஆவின் ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவிக்கபட்டுள்ளது.
மேலும் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்தவகையில் ஆவின் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் மு.நாசர் 30 பணியார்களுக்கு நேரடியாக ஊக்கத்தொகையை வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பணிபுரியும் 1325 பணியாளர்களுக்கு ரூ 12.58 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 2,969 பணியாளர்களுக்கு ரூ 28.47 லட்சமும், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 22,895 பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மொத்தமாக 27,189 பணியாளர்களுக்கு ரூ 270 லட்சம் பொங்கல் ஊக்கத் தொகையானது பால்வளத்துறை அமைச்சரால் வழங்கப்பட்டது.