பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்!
தமிழகத்தில் ஜனவரி 14-ம் தேதி முழுவதில்லை பொங்கல் திருவிழா களை கட்ட தொடங்குவதோடு வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளின் முன்பதிவானது நேற்று முதலில் தொடங்கி விட்டது.
எப்பொழுதும் பண்டிகை காலங்களில் முன்பதிவானது ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதாகவும் பண்டிகை காலம் நெருங்கும் போது தான் அதிகமான முன்பதிவுகள் வரும் இன்றும் போக்குவரத்து துறை சம்பந்தமான அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்ற வருடம் போலவே இந்த வருடமும் வெளியூர் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் அதற்கான ஆலோசனை கூட்டம் நாளடைவில் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல வெளியூருக்கு செல்பவர்கள் தற்போது இருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பண்டிகை காலம் நெருங்கும் பொழுது முன்பதிவானது குறைந்து கொண்டு வரும் நிலையில் முன்கூட்டியே மக்கள் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை தீபாவளி அன்றும் சிறப்பு பேருந்துகள் அமல்படுத்தியும் பலருக்கும் முன்பதிவு கிடைக்காமல் அவதிக்குள்ளான நிலை தற்பொழுது ஏற்படாமல் இருக்க மக்கள் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.