பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேதி வெளியீடு! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு!
தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையன்று தமிழ்மக்கள் அனைவரும் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
அதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த ஆலோசனை கூட்டத்தில் பொங்கல் பரிசாக 1000 ரொக்க பணம் மற்றும் பச்சரிசி,சர்க்கரை வழங்க முடிவு செய்யப்பட்டது.அதனுடன் கரும்பு ஏன் வழங்கவில்லை என விவசாயிகள் தரப்பிலும் எதிர்க்கட்சி உட்பட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதன் காரணமாக பொங்கல் பரிசு தொகுப்புடன் தற்போது கரும்பும் இடம்பெற்றுள்ளது.
அதனால் கடந்த தினத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிப்பு மாற்றி அமைக்கப்பட்டது.இன்று முதல் ஜனவரி 1 ஆம் தேதியை தவிர்த்து அடுத்த ஆறு நாட்களுக்கும் தமிழகம் முழுவதும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் பொங்கல் பரிசை மக்கள் பெற்று கொள்ளலாம்.
பொங்கல் பரிசு வழங்குவதற்கு ஜனவரி 13 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.பொங்கலுக்கு அனைத்து மக்களுக்கும் எளிதாக பொங்கல் பரிசு கிடைக்கும் வகையில் ஜனவரி 13 ஆம் தேதி கடைகளும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.