பொங்கல் பரிசு தொகுப்பு விவரம்? முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழர் பண்டிகை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது தைப்பொங்கல் பண்டிகை தான்.பொங்கல் திருநாளிற்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.சுமார் 2.15கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளின் வாயிலாக ,உணவு பொருள் வழங்க மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது.
மேலும் இவ்வாறு பொங்கல் பரிசு வழங்கும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருபதற்காக எந்த தேதிகளில் யார் வந்து வாங்க வேண்டும் என டோக்கன் போல் வழங்கப்பட்டது.அப்போது அதில் மளிகை பொருட்கள் மற்றும் பொங்கலுக்கு தேவைப்படும் பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நடப்பாண்டும் இது போன்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டது.ஆனால் அதற்கு அரசு உயரதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.கடந்த ஆண்டு கொடுத்த பொருட்களில் சுகாதாரமற்ற பொருட்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.அதனால் இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.
மேலும் முதலில் பொங்கல் பரிசாக ரூ 500வழங்கலாம் என ஆலோசனை நடத்தப்பட்டது.இது மிக குறைவாக உள்ளது என்பதால் அனைத்து ரேஷன் அட்டை தாரார்களுக்கும் ரூ 1000பணம் வழங்க முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது