பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்! உங்கள் ஊர் இதில் இருக்கானு   பாருங்கள்!

0
216
pongal-special-trains-starting-today-see-if-your-town-is-included
pongal-special-trains-starting-today-see-if-your-town-is-included

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்! உங்கள் ஊர் இதில் இருக்கானு   பாருங்கள்!

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் தான்.அவ்வாறு அவர்கள் பயணிக்கும் பொழுது அதிக கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருபதற்கு அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றது.அந்த வகையில் சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் மக்கள் செல்ல ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் இயக்படுகின்றது.

மேலும் கடந்த தீபாவளி பண்டிகையன்று ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டது.அதனால் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் அனைத்து பகுதிகளுக்கும்  சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு மதுரை கோட்ட ரயில்வே உட்பட்ட திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு பொங்கல் சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாளை முதல் 18 தேதி வரை திண்டுக்கல் கோவை இடையே இரு மார்க்கங்களிலும் ஒரு முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் கட்டண சிறப்பு பாசஞ்சர் ரயில் இயக்கப்படும்.இந்த ரயில் வண்டி எண் 06077 கோவையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடையும்.அதனை தொடர்ந்து மறுமார்க்கத்தில் இந்த ரயில் வண்டி எண் 06078 திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் மாலை 5.30 மணிக்கு கோவை ரயில் நிலையம் சென்றடையும்.

இந்த ரயிலானது அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி,புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடிரோடு,உடுமலைப்பேட்டை,கோமங்கலம்,பொள்ளாச்சி,கிணத்துக்கடவு ,போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.மதுரை பயணிகளை பொறுத்தவரை குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரசில் வண்டி எண் 16128 மதுரையில் இருந்து 12.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடையும்.

திண்டுக்கல் கோவை சிறப்பு ரயில் கோவை வரை செல்ல வாய்ப்புள்ளது.ஈரோடு,திருப்பூர் வழியாக செல்லும் நாகர்கோவில் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16321 மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் சென்றடையும்.விரைவில் கோவை செல்ல விரும்பும் பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் நாகர்கோவில் ரயில் இரவு 7 மணிக்கு கோவை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!
Next articleபொங்கலை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்! மாதம்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை!